விருதுநகர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சிகளில் குடியரசு தினவிழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தினவிழாவிற்கு மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமை வகித்து வளாகத்தில் தேசிய கொடியேற்றினார். இதில் வழக்குரைஞர்கள் சங்கத்தின் செயலாளர் ஆனந்தன், இணைச் செயலாளர் சீனிவாசன், முன்னாள் செயலாளர் ரவி உள்ளிட்ட நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரன் கொடியேற்றினார். இதில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் மகேந்திரபாண்டியன், சார்பு ஆய்வாளர் குருசாமி, காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.விருதுநகர் நகராட்சி வளாகத்தி்ல் நடந்த விழாவிற்கு ஆணையாளர்(பொறுப்பு) மணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் மா.சாந்தி பங்கேற்று வளாகத்தில் கொடியேற்றி வைத்தார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழச்சியில் ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி தலைமை வகித்து கொடியேற்றினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சிவராம்குமார் உள்ளிட்ட வட்டார ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இதேபோல், கூரைக்குண்டு ஊராட்சியில் அதன் தலைவர் வேலாயுதமும், பாவாலி ஊராட்சியில் அதன் தலைவர் நாகராஜனும், சிவஞானபுரம் ஊராட்சியில் அதன் தலைவர் கிருஷ்ணமூர்த்தியும் பங்கேற்று தேசிய கொடியேற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.