சிதம்பரம் ஸ்ரீ நடராஜப்பெருமானுக்கு தங்க பாடாம் அணிகலன் அணிவிப்பு
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு பக்தர் ஒருவர் அன்பளிப்பாக வழங்கிய நவரத்தினங்கள் பொருத்திய தங்க பாடாம் என்ற அணிகலன் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அணிவிக்கப்பட்டது


சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு பக்தர் ஒருவர் அன்பளிப்பாக வழங்கிய நவரத்தினங்கள் பொருத்திய தங்க பாடாம் என்ற அணிகலன் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அணிவிக்கப்பட்டது
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஸ்ரீ நடராஜப்பெருமானுக்கு பெயர் வெளியிட விரும்பாத பக்தர் ஒருவர் சுமார் 140 கிராம் (17 பவுன்) தங்கத்தினாலான நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க பாடாம் (நடராஜப் பெருமான் கால்களில் அணியக்கூடிய வகையிலான அணிகலன்) என்ற அணிகலனை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
பக்தர் காணிக்கையாக வழங்கிய ரூ 5 லட்சம் மதிப்பிலான தங்க பாடாம் அணிகலனை ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவ ஏழாம் திருநாளை முன்னிட்டு (கைலாச வாஹணம்) த. துரைஸ்வாமிரத்ன தீட்சிதர், பொது தீட்சிதர்களின் செயலாளர் ஆர்.பாஸ்கர தீட்சிதரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினார். இந்த தங்க பாடாம் அணிகலன் செவ்வாய்க்கிழமை ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு அணிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...