விருதுநகர் அருகே கருந்திரி தயாரிப்பு கூடாரங்களில் போலீஸார் தீவிர ஆய்வு: ரூ.3.50 லட்சம் பொருள்கள் பறிமுதல்

விருதுநகர் அருகே கருந்திரி தயாரிப்பு கூடாரங்களில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதி கிராமங்களில் ஆமத்தூர் போலீஸார் தீவிர ஆய்வு மேற்கொண்டு ரூ.3.50 லட்சம் மதிப்பிலான
Updated on
1 min read

விருதுநகர் அருகே கருந்திரி தயாரிப்பு கூடாரங்களில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதி கிராமங்களில் ஆமத்தூர் போலீஸார் தீவிர ஆய்வு மேற்கொண்டு ரூ.3.50 லட்சம் மதிப்பிலான செவ்வாய்கிழமை காலையில் மூலப்பொருள்களை போலீஸார் பறி்முதல் செய்தனர்.

விருதுநகர் அருகே ஒண்டிப்புலிநாயக்கனூர் கம்மாபட்டி பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த கருந்திரி தயாரிப்பு கூடாரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தும், 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து கிராமங்களில் சட்டவிரோதமாக கருந்திரி கூடாரங்களை நடத்தி வருகிறவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனால் குறிப்பிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து  நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் அன்னப்பராஜா தலைமையில் ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஒண்டிப்புலிநாயக்கனூரில் சட்டவிரோதமாக கருந்திரி ஆலையை நடத்தி வந்த அய்யப்பன்(37) என்பவரின் வீட்டிலிருந்து பசைமாவு 800 கிலோ, சல்பர் 90 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல், ஒண்டிப்புலிநாயக்கனூர் அதிமுக கவுன்சிலர் மீனாட்சி சுந்தரம்(55) என்பவரின் வீட்டிலிருந்து வெள்ளைத்திரி 13800 கட்டுக்கள், மணிமருந்து 10 கிலோ, 18000 கருந்திரி கட்டுக்களையும், இதேபகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் வீட்டிலிருந்து கருந்திரி 6620 கட்டுக்களும், வெள்ளைத்திரி 640 கட்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு மொத்தம் ரூ.3.50 லட்சம் ஆகும்.

இது தொடர்பாக 3 பேர் மீது ஆமத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com