மனைவியுடன் தகராறு: 20 நாள் குழந்தையின் மீது தீ வைத்து தந்தை தற்கொலை

அவரைக் காண நேற்று மாலை மாமியார் வீட்டுக்கு சென்ற லட்சுமணன், மனைவியுடன்  தகராறில் ஈடுபட்டுள்ளார்.
Updated on
1 min read

மதுரை அருகில் உள்ள வாடிப்பட்டி மேலப்பெருமாள் வீதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (30).

இவருக்கு மதுரை சக்கிமங்கலம் பகுதியைச் சேர்ந்த தர்மேஸ்வரியுடன் கடந்த வருடம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை பிறந்து 20 நாளான நிலையில், கணவனுடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை எடுத்துக் கொண்டு தர்மேஸ்வரி தாய் வீடு சென்றார்.

அவரைக் காண நேற்று மாலை மாமியார் வீட்டுக்கு சென்ற லட்சுமணன், மனைவியுடன்  தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கோபத்தில், அங்கிருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தொட்டிலில் கிடந்த குழந்தையின் மீது ஊற்றி தீவைத்து, தன் மீதும் தீவைத்துக் கொண்டார் லட்சுமணன். குழந்தையைக் காப்பாற்ற வந்த தர்மேஸ்வரியின் மீது தீக்காயம் ஏற்பட்டது.

மூவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி லட்சுமணன் உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் பெண் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது.  இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com