விருதுநகரில் இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் சாவு

விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்தவர் மரியசூசை என்பவரின் மகன் ஜேசுராஜ்(31). இவருக்கு திருமணமாகி அமலபுஷம்பம்(21) என்ற மனைவியும், 1 வயது குழந்தையும் உள்ளனர். இவர் செவ்வாய்கிழமை மாலையில்
Updated on
1 min read

விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி 4 வழிச்சாலை தடுப்பு சுவர் மீது மோதியதில் படுகாயம் அடைந்து ஒருவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.

விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்தவர் மரியசூசை என்பவரின் மகன் ஜேசுராஜ்(31). இவருக்கு திருமணமாகி அமலபுஷம்பம்(21) என்ற மனைவியும், 1 வயது குழந்தையும் உள்ளனர். இவர் செவ்வாய்கிழமை மாலையில் சூலக்கரைக்கு சொந்த வேலையாகச் சென்று திரும்பி பாத்திமா நகருக்கு இருசக்கர வாகனத்தில்  வந்து கொண்டிருந்தாராம். அப்போது, தனியார் மில் எதிரே நிலை தடுமாறி 4வழிச்சாலை தடுப்பு சுவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.

இதில், படுகாயம் அடைந்த நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பலனின்றி புதன்கிழமை காலையில் உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மனைவி அமலபுஷம்பம் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com