விருதுநகர் அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் நடவடிக்கை

விருதுநகர் அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மெர்சி(16). இவர் இப்பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் விருதுநகர் அருகே துளுக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்த
Updated on
1 min read

விருதுநகர் அருகே நடைபெற இருந்த சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் புதன்கிழமை நடவடிக்கை எடுத்தனர்.

விருதுநகர் அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மெர்சி(16). இவர் இப்பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் விருதுநகர் அருகே துளுக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்த உறவினரான கருப்பசாமி(21) என்பவருக்கும் வருகிற 15-ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்ததாம். அதற்கு முன்னதாக புதன்கிழமை நிச்சயம் செய்வதற்கு இருவீட்டார்களும் ஏற்பாடு செய்திருந்தனர். இது குறித்து பொதுமக்கள் ஆட்சியர் டி.என்.ஹரிஹரனை தொடர்பு கொண்டு ரகசிய தகவல் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் உடனே சம்பந்தப்பட்ட சமூக நலத்துறை, ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டார்.

அதையடுத்து மாவட்ட சமூக நல அலுவலர் ஐ.பாணடியம்மாள், ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் பாராதமாதா மற்றும் சைல்டு லைன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லதா ஆகியோர் அல்லம்பட்டி பகுதிக்குச் நேரில் சென்றனர். அங்கு விசாரணை செய்ததில் திருமண வயதை அடையாத சிறுமியின் திருமணத்திற்கு  நிச்சயம் செய்வதற்கு ஏற்பாடு செய்து வருவது தெரியவந்தது. உடனே இருவீட்டாரைச் சேர்ந்த பெற்றோர்களையும் அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, குறிப்பிட்ட வயதை அடையாத சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பது சட்ட விதிமுறைப்படி குற்றமாகும் என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைத்து மணமகள் வீட்டாரிடமிருந்து எழுதி வாங்கிக் கொண்டனர். அதையடுத்து, சிறுமியை பாண்டியன் நகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், அந்த சிறுமிக்கு அறிவுரைகள் கூறி பள்ளிக்கு செல்வது குறித்து ஆலோசனைகள் வழங்குமாறும் காப்பாக அலுவலர்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com