இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருப்பணிக் கல்வெட்டு கண்டெடுப்பு

நடராஜர் கோயில் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் திருப்பணி கல்வெட்டினை அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை துணைப் பேராசிரியர்களும், திராவிட வரலாற்று ஆய்வுக்கழக

News image
Updated On :5 ஜூலை 2014, 12:28 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் திருப்பணிக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நடராஜர் கோயில் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் திருப்பணி கல்வெட்டினை அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை துணைப் பேராசிரியர்களும், திராவிட வரலாற்று ஆய்வுக்கழக ஆய்வாளர்களுமான இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி ஆகியோர் கண்டெடுத்துள்ளனர்.கல்வெட்டு குறித்து ஆய்வாளர் இல.கணபதிமுருகன் தெரிவித்ததாவது:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் கிழக்கு கோபுர வாயிலின் வழியாக செல்லும் போது துவார ஸ்கந்தன் சன்னதிக்கு வடபுறம் இருக்கும் நுழைவாயில், இடது நிலைவாயில் பகுதியில் காடவர் குல சிற்றரசரான இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் (கிபி 1243-1279) கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பணி கல்வெட்டு: 

"ஸ்வஸ்தி ஸ்ரீ அவனி ஆளப்பிறந்த கோப்பெருஞ்சிங்கருக்காக திருநிலைக்கால் செய்வித்தார். வர முதலிகளில் பெருமாளப் பிள்ளை யான சோழக்கோனார்" என்பதே நடராஜர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு வரிகளாகும். கல்வெட்டு குறிக்கும் கோப்பெருஞ்சிங்கன் காடவர் குல குறுநில மன்னன் ஆவான். இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனுக்கே 'அவனி ஆளப் பிறந்தான்' என்ற பட்டப்பெயர் இருந்தது.

அவனி ஆளப்பிறந்தான் என்ற பட்டப் பெயர்:

நடராஜர் கோயில் கல்வெட்டில் குறிக்கப்படும் கோப்பெருஞ்சிங்கன், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனை என்பதை 'அவனி ஆளப் பிறந்தான்' என்ற கல்வெட்டு வரி வாயிலாக உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனுக்கு நிர்வாக ஆலோசனை கூற அகம்படி முதல் என்ற நிர்வாகக் குழு உதவிவந்தது. கல்வெட்டில் வர முதலி என குறிக்கப்படும் பெருமாள் பிள்ளையாகிய சோழகோனார் அத்தகைய நிர்வாகக்குழுவில் இடம் பெற்றவர்களில் ஒருவனாவான். எனவே கோப்பெருஞ்சிங்கனின் ஆணைப்படி வர முதலி, கோயிலின் திருநிலைக்காலை செய்வித்த நிகழ்வானது இக்கல்வெட்டின் வாயிலாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை கண்டறியப்படாத கல்வெட்டு:

திருநிலைக்கால் என்பது நிலைவாயில் ஆகும். எனவே இக்கல்வெட்டின் மூலம் கோயிலின் கிழக்குபுற துவார ஸ்கந்தன் சன்னதிக்கு வடக்குபுறம் உள்ள வாயிலே அதிக புழக்கத்தில் இருந்த வாயிலாக அக்காலத்தில் இருந்திருக்க வாய்ப்புள்ளது. மேலும் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் இவ்வாயிலே மூலட்டானேஸ்வரர் திருக்கோயிலுக்கு செல்லும் பிரதான வழியாக இருந்திருக்க வேண்டும். இக்கல்வெட்டு பற்றி இந்திய தொல்லியல்துறை வெளியிட்ட ஆண்டு அறிக்கைகளிலோ, தென்னிந்திய கல்வெட்டு தொகுதிகளிலோ குறிப்புகள் இல்லை. எனவே இக்கல்வெட்டு இதுவரை கண்டறியப்படாத கல்வெட்டாகும். மேலும் கோயிலில் படிக்கட்டுகளாக, நடைபாதைகளில் புதையுண்டு கிடக்கும் கல்வெட்டுகளை ஆய்ந்து வருகிறோம் என திராவிட வரலாற்று ஆய்வுக்கழக ஆய்வாளர் இல.கணபதி முருகன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.