இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

இலவச ஆடுகள் வழங்குவதில் முறைகேடு: வட்டாட்சியர் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள மானியம் ஆடூர் கிராமத்தில் தமிழகஅரசின் விலையில்லா ஆடு வழங்குவது குறித்து பயனாளிகள் தேர்வு செய்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் தகுதியான

News image
Updated On :6 ஜூலை 2014, 2:50 pm

ஜி.சுந்தரராஜன்

காட்டுமன்னார்கோயில் அருகே இலவச ஆடுகள் வழங்க கணக்கெடுத்ததில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக வட்டாட்சியர் வீட்டை பொதுமக்கள்  ஞாயிற்றக்கிழமை காலை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள மானியம் ஆடூர் கிராமத்தில் தமிழகஅரசின் விலையில்லா ஆடு வழங்குவது குறித்து பயனாளிகள் தேர்வு செய்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் ஒரு பிரிவினர் காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் வெங்கடாசலம் வசித்து வரும் குடியிருப்பிற்கு சென்று முற்றுகையிட்டனர். பின்னர் வட்டாட்சியரிடம் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி சந்தையில் ஆடுகள் வாங்க செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும், மீண்டும் கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர். இதனையடுத்து ஊராட்சி நிர்வாகத்திற்கு ஆடுகள் வாங்கக் கூடாது என உத்தரவிட்டு, பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.