ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 4 பவுன் செயின் பறிப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி

News image
Updated On :6 ஜூலை 2014, 8:56 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆராய்ச்சிபட்டி நாடார் தெருவைச் சேர்ந்தவர் ரா.மாரீஸ்வரன் (27). இவர் சனிக்கிழமை இரவு காற்றோட்டத்திற்காக வீட்டின் முன்பக்க கதவைத் திறந்து வைத்து, மனைவி பிள்ளைகளுடன் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அதிகாலை சுமார் 1 மணி அளவில் பாத்ரூம் செல்வதற்காக எழும்பியுள்ளார். அப்போது தலையணைக்கு அடியில் வைத்திருந்த செல்போனை தேடியுள்ளார். அதைக் காணவில்லையாம். செல்போனைத் தேடியபோது, தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினையும் காணது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். வீட்டின் பின் பக்க சுவர் வழியாக ஏறி, மாடிப்படி வழியே வீட்டினுள் வந்த திருடன் இவரது மனைவி அணிந்திருந்த செயினையும், தலையணைக்கு கீழ் இருந்த செல்போனையும் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.

இது குறித்து மாரீஸ்வரன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து செயின் மற்றும் செல்போனை திருடிச் சென்ற நபரைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.