விருதுநகர் அருகே இருசக்கர வாகன விபத்தில்தொழிலாளி சாவு விருதுநகர்,

விருதுநகர் அருகே இருசக்கர வாகன விபத்தில் பட்டாசு ஆலை தொழிலாளி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.    
Updated on
1 min read

விருதுநகர் அருகே இருசக்கர வாகன விபத்தில் பட்டாசு ஆலை தொழிலாளி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.    

விருதுநகர் அருகே சின்னராமலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கணன்(45). இவர் அருகில் உள்ள முதலிப்பட்டி பட்டாசு ஆலை வேலைக்கு சனிக்கிழமை வழக்கம் போல் சாலையில் நடந்து சென்றாராம். அதையடுத்து, வேலை முடிந்து சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி சக்கணன் மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.     இது தொடர்பாக உறவினர் ராமர் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய மிளகாய்பட்டியைச் சேர்ந்த மான்ராஜன் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார்  விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com