

கச்சத் தீவு ஒப்பந்தத்தை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது ஜி.கே வாசன் கூறினார். மேலும் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் ஆன நிலையில் விலைவாசி மட்டுமல்லாது ரயில் கட்டணம் மற்றும் டீசல் விலை போன்றவையும் உயர்ந்து விட்டது சமையல் எரிவாயு விலையை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஆகவே மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த அரசு செயல்படவில்லை. எனவே மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுதில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
இதையடுத்து ரயில் கட்டணம் குறைக்கப்படும் என நம்புகிறோம். ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் ஏழை எளிய மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக அமைய வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி வருகிறது இப்பிரச்சனைகான ஒரே தீர்வு கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்வதுதான். இதை நான் மத்திய அமைச்சராக இருந்த போதில் இருந்தே வலியுறுத்தி வருகிறேன்.
மேலும் காங்கிரஸ் ஆட்சியின் போது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்ட போதெல்லாம் உடனுக்குடன் இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி விடுவிக்கப்பட்டனர். அந்த நடைமுறையை பா.ஜ.க அரசு பின்பற்ற வேண்டும். கச்ச தீவு பிரச்னையில் காங்கிரஸின் நிலைப்பாட்டை தொடர்வதாக பா.ஜ.க கூறுகிறது என்றால் மற்ற செயல்பாட்டிலும் காங்கிரஸை பின்பற்றுவதாக கூறுவார்களா. ஆகவே தமிழக மீனவர்கள் பிரச்னையில் கண்டிபான நிலையுடன் இலங்கை அரசுடன் பேச்சு நடத்த வேண்டும்.
சென்னை, செங்கல்பட்டு கட்டட விபத்துகளால் ஏற்பட்ட உயரிழப்புகள் துயரமானது. இதை தவிர்க்க தனியார் நிறுவங்களின் கட்டுமான பணியை அரசு கண்காணிக்க வேண்டும். என்று கூறினார். மேலும் தேர்தலுக்கு பிறகு நான் தொடர்ந்து கட்சி தொண்டர்களின் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறேன். கட்சி வளர்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன்.
தற்போது தமிழக காங்கிரஸ் ஒரு ஒரு தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் மாநில காங்கிரஸ் செயல்பாட்டை ஏ.கே. அந்தோணி தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. அவர்களின் அறிக்கையில் உண்மைகள் வெளிப்படும்.
அதன்படி வருங்காலத்தில் காங்கிரஸை வலுப்படுத்தும் செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என நம்புகிறேன். மதுரையில் காமராஜர் விழா எனும் பெயரில் எனது ஆதரவாளர்களை திரட்டுவதாக வந்த தகவல் தவறானது என்றார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.