குடிநீர் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய கோரிக்கை

பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காத வகையில், அளவுக்கு அதிகமாக நீரை உறிஞ்சும் தனியார் குடிநீர் தயாரிப்பு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்ய கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காத வகையில், அளவுக்கு அதிகமாக நீரை உறிஞ்சும் தனியார் குடிநீர் தயாரிப்பு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்ய கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆம்ஆத்மி கட்சியின் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஜான் ரமேஷ் தலைமையில், வங்கமனூத்து பகுதியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் திங்கிள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் தெரிவித்தது:

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள சிலுவத்தூர் ஊராட்சிக்குள்பட்டது வங்கமனூத்து கிராமம். இந்த பகுதியைச் சுற்றிலும் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது.இந்த நிலையில் தனியார் குடிநீர் தயாரிப்பு நிறுவனம் அந்த பகுதியில், கடந்த ஆண்டு  தொடங்கப்பட்டது. ராட்சத மோட்டார்கள் பயன்படுத்தி, நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சி வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் வங்கமனூத்து பகுதியைச் சுற்றியுள்ள ப.புதூர், அய்யக்குட்டிபட்டி, கம்பிளியம்பட்டி, கூத்தம்பட்டி, புகையிலைப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது.

மழையில்லாமல் வறட்சி ஏற்பட்டதால், தண்ணீர் பிரச்னை உள்ளதாக கிராமமக்கள் நினைத்து வந்தனர். ஆனால் 2 நாள்கள் குடிநீர் தயாரிப்பு நிறுவனம் உற்பத்தியை நிறுத்தியபோது, நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரத் தொடங்கியது.

மீண்டும் அந்த குடிநீர் நிறுவனம் உற்பத்தியை தொடர்வதால், 150அடிக்கு கிடைத்து வந்த தண்ணீர், தற்போது 1000 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, விவசாயமும் முழுமையாக பாதிப்படையும் நிலை உள்ளது.இதுகுறித்து அந்த தனியார் நிறுவன உரிமையாளரிடம் கேட்டால், அரசிடமிருந்து உரிமம் பெற்றுள்ளோம் என கூறுகின்றனர். எனவே குடிநீர் பிரச்னை ஏற்படாலம் இருக்கவும்,  விவசாய தொழிலை பாதுக்காக்கவும், குடிநீர் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமத்தை, மாவட்ட ஆட்சியர் ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com