ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ராஜபாளையத்திற்கு பள்ளிக்குச் சென்ற பிளஸ் 1 மாணவரைக் காணவில்லை: தந்தை புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர்.ராஜபாளையத்திற்கு பள்ளிக்குச் சென்ற பிளஸ் 2 மாணவரைக் காணவில்லை என தந்தை போலீஸில் புகார் செய்துள்ளார்.

News image
Updated On :7 ஜூலை 2014, 3:01 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்.ராஜபாளையத்திற்கு பள்ளிக்குச் சென்ற பிளஸ் 2 மாணவரைக் காணவில்லை என தந்தை போலீஸில் புகார் செய்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆராய்ச்சிபட்டி சௌண்டியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆ.முருகன் (40). இவரது மகன் திஜித்குமார் (17). இவர் ராஜபாளயைத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

இந்நிலையில் தனக்கு சரிவர படிப்பு வராததால், பள்ளியில் ஆசிரியர்கள் கண்டிப்பதாக வீட்டில் கூறி வந்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை முருகன் தனது மனைவியுடன் வெளியூர் சென்றுவிட்டாராம். இரவு 8 மணிக்கு மேல் வீடு திரும்பியுள்ளார்கள்.

வீட்டில் திஜித்குமார் இல்லையாம். பல இடங்களில் தேடியும் மகன் கிடைக்காததையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் முருகன் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.