விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நெல்லை: மக்கள் காலிக்குடங்களுடன் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

மாநகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மேயர் (பொ) பூ. ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் அர. லெட்சுமி முன்னிலை வகித்தார். மாநகர பொறியாளர் ஜெயசேவியர்,

News image
Updated On :8 ஜூலை 2014, 9:07 am

ஷேக் அப்துல்காதர்

குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மேயர் (பொ) பூ. ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் அர. லெட்சுமி முன்னிலை வகித்தார். மாநகர பொறியாளர் ஜெயசேவியர், மண்டலக்குழுத் தலைவர்கள் ந. மோகன் (நெல்லை), கி. மாதவராமானுஜம் (தச்சநல்லூர்), மாநகராட்சி நிர்வாக பொறியாளர் நாராயண்நாயர், செயற்பொறியாளர் செளந்தரராஜன், மாநகர மருத்துவ அலுவலர் பாலகணேஷ்குமார், உதவி ஆணையர்கள் ஆ. பெருமாள், து. கருப்பசாமி, சாமுவேல்செல்வாஜ், சாந்தி, உதவி பொறியாளர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாநகராட்சியின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் குடிநீர், சாலை, தெருவிளக்கு, சுகாதாரம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து மேயரிடம் மனு அளித்தனர். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை மேயர் கேட்டுக் கொண்டார்.இதனிடையே தச்சநல்லூர் மண்டலம், மாநகராட்சி 4 ஆவது வார்டு உடையார்பட்டி வாழவந்த அம்மன் கோயில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர். தங்கள் பகுதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் விநியோகம் கிடைக்கவில்லை என அவர்கள் புகார் தெரிவித்தனர்.

அப்பகுதிக்கு சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் மேயர், மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.