விருதுநகர் மாவட்டத்தில் சுயநிதிப்பாட பிரிவு பிளஸ்2 மாணவ மாணவிகள் கவனத்திற்கு...
விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் சுயநிதிப்பாட பிரிவுகளில் பிளஸ்2 படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசு விதிமுறைகளின் படி விலையில்லா மடிக்கணினி வழங்கப்படமாட்டாது என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
இந்த மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் சுயநிதிப்பாடப்பிரிவுகளில் மாணவ, மாணவிகள் பிளஸ்2 பயின்று வருகின்றனர். இவர்களுக்கு அரசு விதிமுறைப்படி விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படாது. எனவே அரசின் கொள்கை முடிவு என்பதாலும், பள்ளி நிர்வாகம் ஆகியவைகளுக்கு எவ்வித குந்தகமும் இல்லாமல் தலைமையாசிரியர்கள் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக விலையில்லா மடிக்கணினிகள் வழங்க வலியுறுத்தி மாணவிகள் பெற்றோர்களுடன் வந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இனிமேல் இதுபோன்று மறியலில் ஈடுபட்டாலோ, ஏதேனும் தவறுகள் அல்லது நிர்வாக பிரச்னைகள் ஏற்பட்டாலோ அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தான் பொறுபேற்க வேண்டும். அதேபோல், மறியலில் ஈடுபடும் மாணவ, மாணவிகள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
