இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஜூலை 21-ல் அனைத்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்க, பல்கலைக்கழக அலுவலர் சங்க கூட்டமைப்பு முடிவு

அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு 2வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 21-ல் அனைத்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்க

News image
Updated On :12 ஜூலை 2014, 8:50 am

ஜி.சுந்தரராஜன்

அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு 2வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 21-ல் அனைத்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்க அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது என கூட்டமைப்பு தலைவர் எஸ்.மதியழகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.மதியழகன் தெரிவித்தது: சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் 2வது மாநில மாநாட்டில் 7 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும்  நிதிஉதவியை (Block Grant) உயர்த்தி வழங்க வேண்டும், தமிழகஅரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆட்சிமன்றம் மற்றும் ஆளவை மன்றங்களில், ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கிட வேண்டும், பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் அனைவரும் 60 வயது வரை பணியாற்ற ஆணை பிறப்பிக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியரிடமும் வருகிற ஜூலை 21-ம் தேதி கூட்டமைப்பு சார்பில் மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுளளது என எஸ்.மதியழகன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.