ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சக்கரம் கழன்று ஓடியதால் கண்டெய்னர் லாரி விபத்து

கண்டெய்னர் லாரி ஒன்று வேலூர் நோக்கி சென்றது.  ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு கிராமத்தருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது.  லாரியின் சக்கரம்

Updated On :13 ஜூலை 2014, 9:24 am

ஆம்பூர் அருகே கண்டெய்னர் லாரியின் சக்கரம் கழன்று ஓடியதால் சனிக்கிழமை இரவு விபத்து ஏற்பட்டது.

கண்டெய்னர் லாரி ஒன்று வேலூர் நோக்கி சென்றது.  ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு கிராமத்தருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது.  லாரியின் சக்கரம் கழன்றதால் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சென்று சாலை தடுப்பின் மீது மோதி நின்றது.  அதனால் முன்பக்க மற்றொரு சக்கரமும், டீசல் டேங்கும் உடைந்து விழுந்தன.  லாரியின் டிரைவர் பயத்தில் அங்கிருந்து ஓடி தலைமறைவானார். 

தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பெரிய கண்டெய்னர் லாரி நின்றதால் எந்த வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீஸôர் அங்கு சென்று லாரியை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.  அதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  பின்னர் போக்குவரத்து சீரான உடன் வாகனங்கள் செல்லத் தொடங்கின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.