ஆம்பூர் அருகே கண்டெய்னர் லாரியின் சக்கரம் கழன்று ஓடியதால் சனிக்கிழமை இரவு விபத்து ஏற்பட்டது.
கண்டெய்னர் லாரி ஒன்று வேலூர் நோக்கி சென்றது. ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு கிராமத்தருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. லாரியின் சக்கரம் கழன்றதால் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சென்று சாலை தடுப்பின் மீது மோதி நின்றது. அதனால் முன்பக்க மற்றொரு சக்கரமும், டீசல் டேங்கும் உடைந்து விழுந்தன. லாரியின் டிரைவர் பயத்தில் அங்கிருந்து ஓடி தலைமறைவானார்.
தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பெரிய கண்டெய்னர் லாரி நின்றதால் எந்த வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீஸôர் அங்கு சென்று லாரியை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். அதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போக்குவரத்து சீரான உடன் வாகனங்கள் செல்லத் தொடங்கின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

