இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

முதலை கடித்து காலை இழந்த மாணவருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு

சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த வி.கனகராஜ் மகன் கே.ஹரீஸ் என்ற மாணவர் கடந்த மே.20-ம் தேதி பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது முதலை கடித்து இடது காலை

News image
Updated On :13 ஜூலை 2014, 12:53 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே முதலை கடித்து இடதுகாலை இழந்த மாணவருக்கு தமிழகமுதல்வர் உத்தரவின் பேரில் இழப்பீடு தொகை ரூ.3லட்சம் வழங்கப்பட்டது.

சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த வி.கனகராஜ் மகன் கே.ஹரீஸ் என்ற மாணவர் கடந்த மே.20-ம் தேதி பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது முதலை கடித்து இடது காலை இழந்தார். இதுகுறித்து சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கடிதம் அளித்தார். இதனையடுத்து தமிழக முதல்வர் மேற்கண்ட மாணவருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்.

முதல்வரின் ஆணைப்படி மாணவர் கே.ஹரீஷ் மற்றும் அவரது தந்தை கனகராஜ் ஆகியோரிடம் சிதம்பரம் வனச்சரக அலுவலர் எல்.ரவிச்சந்திரன் ரூ.3 லட்சத்திற்கான காசோலையை ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.