இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிதம்பரம் அருகே டிராக்டர் டிரெய்லர் கவிழ்ந்து 75 பேர் காயம்!

சிதம்பரம் அருகே வீராணம்ஏரிக்கரையில் உள்ள வாழைக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திரஜித். இவரது உறவினர் கே.ஆடூர் கிராமத்தில் இறந்துவிட்டதால், ஊரிலிருந்து டிராக்டர் டிரெய்லரில் சுமார் 80

News image
Updated On :14 ஜூலை 2014, 1:15 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே டிராக்டர் டிரெய்லர் கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 60 பெண்கள் உள்ளிட்ட 75 பேர் காயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

சிதம்பரம் அருகே வீராணம்ஏரிக்கரையில் உள்ள வாழைக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திரஜித். இவரது உறவினர் கே.ஆடூர் கிராமத்தில் இறந்துவிட்டதால், ஊரிலிருந்து டிராக்டர் டிரெய்லரில் சுமார் 80 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளார். அப்போது ஏரிக்கரை மெயின்ரோட்டில் குறுக்கே வந்த லாரிக்காக, ஏற்றமான இடத்தில் டிராக்டரை திடீரென நிறுத்திய போது பின்புறம் இருந்த டிரெய்லர் பள்ளத்தில் கவிழுந்த்தது.

இதில் டிராக்டர் டிரெய்லரில் பயணம் செய்த இந்திரா (33), மொட்டையன் (60), மலர்கொடி (50), ராணி (56), கலா (40), பெளனம்மாள் (42), லட்சுமி (50) உள்ளிட்ட 75 பேர் காயமுற்றனர். இதில் 60 பேர் பெண்கள் அடங்குவர். காயமுற்றவர்கள் அனைவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். காயமுற்றவர்களை சிதம்பரம் மண்டல துணை வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி, வருவாய் ஆய்வாளர் கே.அசோகன் ஆகியோர் சென்று பார்வையிட்டு போதிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து ஆறுதல் தெரிவித்தனர். விபத்து குறித்து ஒரத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.