ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நில ஆர்ஜித வழக்கில் ரூ.12 லட்சம் வழங்காததால் ஸ்ரீவிலி. வட்டாட்சியர் ஜூப் ஜப்தி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் கட்டப்படுவதற்கு நில ஆர்ஜிதம் செய்ததில் போதுமான இழப்பீடு அரசு வழங்கவில்லை என்ற மனுவை விசாரித்த நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ரூ.12,23,886

News image
Updated On :14 ஜூலை 2014, 2:40 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் கட்டப்படுவதற்கு நில ஆர்ஜிதம் செய்ததில் போதுமான இழப்பீடு அரசு வழங்கவில்லை என்ற மனுவை விசாரித்த நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ரூ.12,23,886 வழங்காததால் திங்கள்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியரின் ஜூப் ஜப்தி செய்யப்பட்டது.

தேனி, பாரதியார் மெயின் ரோடு, என்.ஆர்.டி. நகரைச் சேர்ந்தவர் ஏ.விஜயராமன். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களின் பிள்ளைகள் ராஜாராம், கணேஷ். விஜயராமன் இறந்துவிட்டார். இவர்களின் நிலம் விருதுநகர், கூரைக்குண்டு கிராமத்தில் 1.63 ஏக்கர் இருந்துள்ளது.  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்காக 1986-ம் ஆண்டு இந்த நிலத்தை அரசு சார்பில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் நில ஆர்ஜிதம் செய்தார். அப்போது ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் அரசு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இந்த தொகை போதாது என்று கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றம் சென்டிற்கு ரூ.1200 கூடுதலாக அனுமதித்து ரூ.1,95,600 வழங்க உத்தரவிட்டது. ஆனால் அரசு தரப்பில் இந்தத் தொகை வழங்கப்படவில்லை. இதனையடுத்து ராஜலட்சுமி மற்றும் அவரது பிள்ளைகள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். 30.2.2012 வரை வட்டியுடன் சேர்ந்து ரூ.12,23,886 அரசு வழங்க நீதிமன்றம் உத்தரதவிட்டது. இதனை சார்பு நீதிமன்றம் கண்காணித்து நிறைவேற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தொகையும் வழங்கப்படாத நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி பிருந்தா கேசவாச்சாரி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியரின் இரு ஜூப்புகள் மற்றும் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டரர்.

இரு ஜூப்புகளின் ஒன்று பயனற்று போனதையடுத்து, வட்டாட்சியர் பயன்படுத்தும் ஜூப்பை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.