பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தொடக்க கூட்டுறவு அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சார்பில் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு அனைத்து பணியாளர் சங்கத்தினர் திங்கள்கிழமை
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சார்பில் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு அனைத்து பணியாளர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார்.இதில், நியாய விலைக்கடை பணியாளர்களின் ஊதிய ஒப்பந்தம் 31.12.2013 அன்றோடு முடிவடைந்ததால், 1.1.2014 முதல் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக விற்பனையாளர்களுக்கு வழங்குவது போல் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். நியாய விலைக் கடை பணியாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நியாய விலைக்கடை பணியாளர்கள், சங்க பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஆகியோருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

விற்பனையாளர்களுக்கு அபராத தொகை வசூலிப்பதை முழுமையாக ரத்து செய்யவும், பொதுவிநியோக திட்டத்தில் பாக்கெட் முறையை பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தொடக்க கூட்டுறவு அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக சங்கத்தினர் பேரணியாகச் சென்று ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை அளித்தனர்.

இதில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ்நாடு மாநில தொடக்க  கூட்டுறவு அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com