விருதுநகர் பகுதி கடைகளில் தடை விதித்த புகையிலை பொருள்கள் விற்பனை: 7 பேர் கைது

விருதுநகர் பகுதியில் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களான பான்பராக், குட்கா உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்கப்படுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதுபோன்ற பொருள்களை
Updated on
1 min read

விருதுநகர் பகுதியில் தடை விதிக்கப்பட்ட புகையிலை பொருள்கள், பான்பராக் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்து கடை வியாபாரிகள் 7 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் பகுதியில் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களான பான்பராக், குட்கா உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்கப்படுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதுபோன்ற பொருள்களை அரசு தடையையும் மீறி கிராமங்களில் பெட்டிக் கடைகளில் அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இதனால் கூலி வேலை செய்கிறவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோர் வாங்கி உபயோகப்படுத்தி வருவதால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்களிடம் இருந்து சூலக்கரை காவல் நிலையத்திற்கு புகார் வந்தது.

அதன் அடிப்படையில் இப்பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் போலீஸார் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தது ஆய்வில் தெரியவந்தது. அதையடுத்து உடனே புகையிலைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதோடு, இது தொடர்பாக அரசகுடும்பன்பட்டியைச் சேர்ந்த ரெங்கசாமி(48), சூலக்கரை வ.ஊ.சி.நகர் ஸ்ரீதர்(30), எம்.ஜி.ஆர்.நகர் செந்திக்குமார்(40), கோவில்புலிகுத்தி காசி, சூலக்கரை தனியார் மில் பகுதியைச் சேர்ந்த கலா(38), சூலக்கரை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முனியசாமி, அதே பகுதியைச் சேர்ந்த கனகேஸ்வரி(44) உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து போலீஸார் கைது செய்தனர்.

மேலும், பெட்டிக்கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பான்பராக், குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com