விருதுநகர் மாவட்டத்தில் நியாய விலைக்கடைகளில் முறைகேடு செய்த விற்பனையாளர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் முறைகேடுகள் செய்த விற்பனையாளர்கள் 4 பேரை  தாற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் முறைகேடுகள் செய்த விற்பனையாளர்கள் 4 பேரை  தாற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நியாய விலைக்கடைகளில் மண்டல இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் ஆய்வின் போது இருப்பு குறைவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் செய்திருப்பது தெரியவந்தது. எனவே முறைகேடுகள் செய்த நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு ரூ.117928.50(ஒரு லட்சத்து, பதினேழு ஆயிரத்து, தொள்ளாயிரத்து இருபத்தெட்டு ரூபாய் மற்றும் ஐம்பது காசுகள்) வரையில் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், கடும் முறைகேடு செய்த பி.ராமச்சந்திரபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் நடத்தும் நூர்சாகிபுரம், துலுக்கன்குளம், தாயில்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் நடத்தும் செவல்பட்டி மற்றும் சாமிநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நடத்தும் ஈஞ்சார் ஆகிய நியாய விலைக்கடைகளின் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டனர். அதன் அடிப்படையில் 4 விற்பனையாளர்களை தாற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து மண்டல இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com