டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்தவர் சாவு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலை சேர்ந்த ஒருவர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் புதன்கிழமை இறந்தார்.


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலை சேர்ந்த ஒருவர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் புதன்கிழமை இறந்தார்.
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள பெருங்காலூரைச் சேர்ந்த மூவேந்தன் (33). இவருக்கு திருமணமாகி என்ற காயத்திரி என்ற மனைவியும், முகிலின் (11), தர்ஷினி (9) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 தினங்கள் முன்பு பெங்களூர் சென்று வீடு திரும்பியுள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு மூவேந்தனுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிசிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேகர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த மூவேந்தன் புதன்கிழமை இரவு இறந்தார். இறந்து போன மூவேந்தனுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறியுள்ளதாக ஜிப்மர் மருத்துவர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...