ரூ.6 கோடி மோசடி புகார்: ஈமு கோழி அதிபர் கைது

திண்டுக்கல் செளந்தரராஜா நகரைச் சேர்ந்தவர் வீ.ராஜபாண்டி(36). இவர், திண்டுக்கல் சொசைட்டித் தெருவில் ஈமு கோழிப்பண்ணை நடத்தி வந்துள்ளார். இதில் திண்டு்க்கல், கரூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட
Updated on
1 min read

ரூ.6 கோடி மோசடி புகாரில், திண்டுக்கல் ஈமு கோழி பண்ணை அதிபரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

திண்டுக்கல் செளந்தரராஜா நகரைச் சேர்ந்தவர் வீ.ராஜபாண்டி(36). இவர், திண்டுக்கல் சொசைட்டித் தெருவில் ஈமு கோழிப்பண்ணை நடத்தி வந்துள்ளார். இதில் திண்டு்க்கல், கரூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பலர் முதலீடு செய்துள்ளனர்.இந்த நிலையில், ஈமு கோழியும் வழங்காமல், முதலீடு செய்த பணத்தையும் கொடுக்காமல் மோசடி செய்வதாக உரிமையாளர் ராஜபாண்டி மற்றும் அவரது உதவியாளர் சுரேஷ் ஆகியோர் மீது, முதலீட்டாளர்கள் 78 பேர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர்.

மேலும் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன், உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடுத்துள்ளார். அதன்பேரில் விசாரணை நடத்திய நீதிமன்றம், ரூ.6.33 கோடி மோசடி புகார் தொடர்பாக ராஜபாண்டி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதனை அடுத்து மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வன் தலைமையிலான போலீஸார், ஈமு பண்ணையின் உரிமையாளர் ராஜபாண்டியை திங்கள்கிழமை கைது செய்தனர். பின்னர் மதுரை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com