கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூடுதல் வரதட்சிணைக் கேட்டு மனைவியைத் துன்புறுத்தியதாக அவரது கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூடுதல் வரதட்சிணைக் கேட்டு மனைவியைத் துன்புறுத்தியதாக அவரது கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கான்சாபுரத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது மனைவி தங்கம் (எ) திவானம்மாள் (28). இவர்களுக்கு 21.6.10-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது, 12 பவுன் தங்க நகை மற்றும் ரூ.60 ஆயிரம் வரதட்சிணையாகக் கொடுத்துள்ளார்கள். கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் ஊதாரித்தனமாக செலவு செய்து நகைகளை வாங்கிக் கொண்டார்களாம். மேலும் 25 பவுன் நகைகளும் ரூ.1 லட்சமும் கூடுதலாக வரதட்சிணையாகக் கேட்டு, தங்கம் (எ) திவானம்மாளை அடித்து விட்டிலிருந்து துரத்திவிட்டார்களாம். தாய் வீட்டிலிருந்த தங்கத்தை, கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் வந்து மிரட்டிச் சென்றார்களாம். இது குறித்து தங்கம் (எ) திவானம்மாள் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. இதன் பேரில் போலீஸார் கணவர் சாகுல் ஹமீது, இவரது தந்தை சா.அப்துல் கலாம், இவரது மனைவி சைத்தான் பாப்பாத்தி, இவர்களின் மகன்கள் அக்பர் அலி, சையது அலி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...