ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவிலி. நகர்மன்றக் கூட்டத்தினுள் திடீரென புகுந்து குடிநீர் கேட்ட பொதுமக்கள்: பரபரப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி கூட்டத்தினுள் திடீரென புகுந்து பொது மக்கள் குடிநீர் கேட்டு பிரச்னை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நகராட்சி ஊழியர்கள் பின்னர் அவர்களை சமாதானம் செய்து கூட்ட அரங்கை விட்டு

News image
Updated On :28 ஜூலை 2014, 12:20 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி கூட்டத்தினுள் திடீரென புகுந்து பொது மக்கள் குடிநீர் கேட்டு பிரச்னை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நகராட்சி ஊழியர்கள் பின்னர் அவர்களை சமாதானம் செய்து கூட்ட அரங்கை விட்டு வெளியே அனுப்பினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியின் அவசரக் கூட்டம் திங்கள்கிழமை நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் ஆரம்பிக்கும் முன்பே காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது பகுதிக்கு குடிநீர் வரவில்லை என்று கோரி வந்தனர். இவர்களிடம் நாளைக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் என்று ஆணையாளர் பழனிவேல் கூறி அனுப்பினர்.

பின்னர் கூட்டம் ஆரம்பமானது. கூட்டம் ஆரம்பித்த சற்று நேரத்தில் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் கூட்ட அரங்கிற்கு வந்தார்.

அப்போது தி.மு.க. உறுப்பினர் வழக்குரைஞர் அய்யாவுப்பாண்டியன், எம்.எல்.ஏ.யிடம் கடந்த 3 ஆண்டுகளாக நீங்கள் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருக்கிறீர்கள். நகராட்சிக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டார். அப்போது எம்.எல்.ஏ., நான் பார்வையாளராகவே இங்கு வந்துள்ளேன். இருந்த போதிலும் நான் இதற்கு விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளேன் என்று கூறி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை அவசியம் அவசரம் கருதி முன்னுரிமை கொடுத்து பிரித்துக் கொடுத்துள்ளேன். எனக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மட்டும் கிடையாது. இரு ஊராட்சி ஒன்றியங்கள், 5 பேரூராட்சிகள் உண்டு. என்னைத் தேடி வந்து கேட்ட உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கூறிய வேலைகளையும் செய்து கொடுத்துள்ளேன் என்றார்.

அப்போது இடையபொட்டல் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு நகர்மன்ற கூட்ட அரங்கிற்குள் யாரும் எதிர்பாராத வகையில் புகுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.மன்ற உறுப்பினர்கள், குடிநீர் பிரச்னை குறித்துதான் பேசிக் கொண்டுள்ளோம். பொதுமக்கள் இதுபோன்று கூட்ட அரங்கிற்குள் வந்து பிரச்னையில் ஈடுபடக்கூடாது என்று கூறினர். பின்னர் நகராட்சி ஊழியர்கள் அவர்களை சமாதானம் செய்து அப்புறப்படுத்தினர்.

பின்னர் எம்.எல்.ஏ. பொன்னுப்பாண்டியன் பேசுகையில், நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது. இது விஷயத்தில் சுமார் 10 ஆண்டுகள் பின்தங்கியுள்ளோம். நகரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டும் புதியதாக ஒரு பேருந்து நிலையம் அவசியமாக உள்ளது. இது குறித்து பல முறை அரசு உயர் அதிகாரிகளையும், சம்பந்தப்பட்ட அமைச்சரையும் நேரில் சந்தித்து முறையிட்டுள்ளேன். நகராட்சியின் தீர்மானம் கேட்கிறார்கள். நகராட்சி நிர்வாகம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு பயனுள்ள இடத்தைத் தேர்வு செய்து கொடுத்தால், அரசிடம் நிதி பெற்று புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

மேலும் நூலகம் அமைவதற்கு சுமார் ரூ.1 கோடி நிதி வந்துள்ளது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் நகராட்சி இதற்கு இடத்தை ஒதுக்கித் தரவில்லை. இதற்கான தீர்மானத்தையும் நகராட்சி போட்டுக் கொடுத்தால், நூலகம் கட்டுவதற்கு உதவியாக இருக்கும். இல்லை என்றால் இந்த நிதி வேறு வேலைக்குச் சென்றுவிடும் நிலை ஏற்படும் என்றார் அவர். பின்னர் 64 மன்றப் பொருள்கள் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.