பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை இணைத்து கழகமாக உருவாக்க வேண்டும்: ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

மதுரை மண்டல பொது காப்பீட்டுத்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் விருதுநகர் மாவட்ட குழுக் கூட்டம் அச்சங்க வளாகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் காளிதாசன்
Updated on
1 min read

அரசின் 4 பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றாக இணைத்து கழகமாக உருவாக்க வேண்டும் என பொது காப்பீட்டு துறை ஊழியர்கள் சங்க மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை மண்டல பொது காப்பீட்டுத்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் விருதுநகர் மாவட்ட குழுக் கூட்டம் அச்சங்க வளாகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் காளிதாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜவஹர் குழு அறிக்கை சமர்பித்தார். இதில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் தலைவித்தாடும் தீண்டாமை கொடுமைகளுக்கு மாவட்ட நிர்வாகம்  உரிய முறையில் தீர்வு காணப்பட வேண்டும்.

அரசின் பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றாக இணைத்து ஒரே கழகமாக உருவாக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக மழையில்லாமல் இருக்கும் இம்மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் மகாலட்சுமி, மதுரை மண்டல பொது காப்பீட்டுத்துறை ஊழியர் சங்கத்தின் இணைச்செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்று வாழத்துரை வழங்கினார்கள். இதில் மண்டல இணைச்செயலாளர் நிறைவுறையாற்றினார். மாவட்ட பொருளாளர் வேல்முருகன் நன்றிவுரை கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாவட்ட, வட்டார கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com