விருதுநகரில் புக்கிங் அலுவலகத்திற்கு முன்பு நின்றிருந்த லாரி மாயம்

விருதுநகர் அருகே மூளிப்பட்டியைச் சேர்ந்த மைக்கேல் என்பவரின் மகன் ஆரோக்கியராஜ்(26). இவர் இங்குள்ள தனியார் ஏஜென்சியில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் புதன்கிழமை இரவு
Updated on
1 min read

விருதுநகரில் ஏஜென்சி புக்கிங் அலுவலகம் முன்புசரக்கு ஏற்றுவதற்காக நிறுத்தியிருந்த லாரியை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

விருதுநகர் அருகே மூளிப்பட்டியைச் சேர்ந்த மைக்கேல் என்பவரின் மகன் ஆரோக்கியராஜ்(26). இவர் இங்குள்ள தனியார் ஏஜென்சியில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் புதன்கிழமை இரவு விருதுநகர்-சிவகாசி சாலையில் உள்ள புக்கிங் அலுவலகத்திற்கு சரக்கு ஏற்றுவதற்காக லாரியை கொண்டு வந்து சாலையோரம் நிறுத்தியுள்ளார். அப்படியே இரவு உணவுக்காக ஓட்டல் சென்று விட்டு அப்பகுதியில் உள்ளவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாராம். பின்னர் திரும்பி வந்து பார்க்கும் போது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மாயமாகியிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும், அப்பகுதியில் ஓட்டுநர்களிடம் லாரி குறித்து விசாரித்தில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்த லாரியின் மதிப்பு ரூ.3 லட்சம் மதிப்புடையது ஆகும். உடனே இது குறித்து விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ஆரோக்கியராஜ் புகார் செய்தார். அதன் பேரில் ஏஜென்சியின் முன்பு சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com