விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நெல்லை ரயில் நிலையத்தில் தவற விட்ட தங்கநகை பெண்ணிடம் ஒப்படைப்பு

திருப்பூரை சேர்ந்தவர் நித்யானந்தம் (51). இவரது மனைவி எபனேசர் சொர்ண செல்வி (47). தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள உறவினர் வீட்டு வந்த நித்யானந்தமும், அவரது எபனேசரும் கடந்த மே 30 ஆம்

News image
Updated On :1 ஜூன் 2014, 1:18 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் தவறவிட்ட தங்க நகையை திருப்பூரை சேர்ந்த பெண்ணிடம் ஞாயிற்றுக்கிழமை ரயில்வே போலீஸார் ஒப்படைத்தனர்.

திருப்பூரை சேர்ந்தவர் நித்யானந்தம் (51). இவரது மனைவி எபனேசர் சொர்ண செல்வி (47). தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள உறவினர் வீட்டு வந்த நித்யானந்தமும், அவரது எபனேசரும் கடந்த மே 30 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து கோவை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருப்பூர் சென்றாராம்.சந்திப்பு ரயில் நிலையத்தில் வைத்து எபனேசர்சொர்ண செல்வி, தான்அணிந்திருந்த 5 பவுன் எடையுள்ள தங்கநகையை கழற்றி தனது கைப்பையில் வைத்தாராம். திருப்பூர் சென்று பார்த்தபோது, தங்கநகையை காணவில்லை. தான் வைத்திருந்த கைப்பை கிழிந்து ஓட்டை இருந்ததை அறிந்த எபனேசர் திருப்பூர் ரயில் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனிடையே சந்திப்பு ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட ரயில்வே காவலர் விஜயகுமார், முதல் நடைமேடையில் பயணிகள் இருக்கை பகுதியில் இருந்து தங்கநகை ஒன்றினை மீட்டு நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் தங்கநகையை தவறவிட்ட எபனேசர் சந்திப்பு ரயில்வே காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலிக்கு எபனேசரும், அவரது கணவரும் வந்தனர்.சந்திப்பு ரயில்வே காவல் நிலையம் சென்று நகை தவற விட்டது குறித்து விவரங்கள் தெரிவித்தனர். அவர்களிடம் ரயில்வே காவல் ஆய்வாளர்அருள்பிரகாஷ், உதவி ஆய்வாளர் ராஜகுமாரி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

பின்னர் எபனேசரிடம் தங்கநகையை ரயில்வே போலீஸார் ஒப்படைத்தனர். நகையை கண்டெடுத்து காவலர் விஜயகுமாரை பொதுமக்கள், ரயில்வே அதிகாரிகள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.