புத்தக பைகள், நோட்டு, எழுது பொருட்களின் விலை கடந்த ஆண்டை விட 10 சதவீதம் உயர்ந்து உள்ளது.
பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்ததும், ஏப்ரல் மாதம் விடுமுறை விடப்பட்டது. சமீபத்தில் பள்ளி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்வு முடிவுகளையடுத்து, மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்ல இருக்கிறார்கள்.தற்போது கோடை விடுமுறை முடிந்து, திங்கள்கிழமை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களை கவரும் விதத்தில் கடலூர் நகரில் உள்ள கடைகளில் புத்தக பைகள், நோட்டு, புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்கள் குவித்துவைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும், அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார்போலவும் பல வண்ணங்களில், புதுமையாக நோட்டுகள், எழுது பொருட்கள் வந்து உள்ளன.இவற்றை மாணவர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். திங்கள்கிழமை காலை பள்ளிகள் திறக்கப்பட்டதால், ஞாயிற்றுக்கிழமை காலை முதலே நோட்டு புத்தகங்கள் விற்கும் கடைகளில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் தங்களின் பெற்றோரையும் அழைத்துக்கொண்டு, அவர்களின் விருப்பத்தையும் கேட்டறிந்து பள்ளி பொருட்களை வாங்கி சென்றனர்.
நோட்டு, எழுது பொருட்கள், புத்தக பைகளின் விலைகள் கடந்த ஆண்டை விட அதிகரித்து உள்ளன. விலையை பொருட்படுத்தாமல், மாணவர்கள் ஆர்வமுடன் கடைகளுக்கு வந்து பிடித்த பொருட்களை வாங்கி செல்கிறார்கள். ரூ.200 முதல் ரூ.2 ஆயிரம் வரை புத்தக பைகள் விற்கப்படுகின்றன. இதில் ரூ.500 முதல் ரூ.800 வரையிலான பைகள் அதிகமாக விற்பனை ஆகுவதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், கடந்த ஆண்டை விட 10 சதவீதம் விலை அதிகரித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சிறுவர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் தனித்தனியாக புத்தக பைகளின் அளவிலும், விலையிலும் மாற்றங்கள் உள்ளன.அதேபோல், நோட்டுகளின் விலையும் ரகத்துக்கு ஏற்ப குறைந்தபட்சம் 5 முதல் 10 சதவீதம்வரை உயர்ந்து உள்ளது. மாணவர்களை கவரும் வகையில் வண்ண வண்ண அட்டைகளுடன் நோட்டுகள் விற்கப்படுகின்றன. பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களின் விற்பனையும் சூடுபிடித்து உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!

அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை

மொபைலில் சப்தமாக பேசினால் ரூ.500 அபராதம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
மறுவரையறை மசோதா தோல்வி! அரசியலமைப்பு மீதான தாக்குதல் தோற்கடிப்பு: ராகுல்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

