நெல்லையில் முதியோர் ஓய்வூதியம் வழங்க கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
கடந்த 6 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கவில்லை என புகார் தெரிவி்த்து திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தை 50 க்கும் மேற்பட்ட முதியோர் முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தனர்.


கடந்த 6 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கவில்லை என புகார் தெரிவி்த்து திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தை 50 க்கும் மேற்பட்ட முதியோர் முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தனர்.
தமிழக அரசு முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. ஓயவூதியம் பெறும் முதியோர்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படுகிறது.
தென்காசி வட்டம், மத்தளம்பாறை கிராமத்தை சேர்ந்த பயனாளிகள் பன்னீர்செல்வம், பேச்சியம்மாள், மு்ததம்மாள், மேரிபுஷ்பம், ராமசுந்தரம், வைரமதி, முருகன், நடராஜன், முருகசெல்வி, சுந்தரி, வேலம்மாள், நடராஜன், பரமசிவன் உள்பட 50 க்கும் மேற்பட்டோருக்கு கடந்த 6 மாதமாக முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படவில்லையாம்.
மத்தளம்பாறை ஊராட்சி மன்ற உறுப்பினர் எம். சந்தனமாரிபீட்டர்ராஜ் தலைமையில் முதியோர் ஓய்வூதியம் பெறும் ஆண்கள், பெண்கள் 50 க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர். பின்னர் ஆட்சியரை சந்தித்து கோரி்க்கை மனு அளித்தனர்.
சிறப்பு பேரூந்து வசதி: மானூர் ஒன்றியம், பாலாமடை கிராமத்தில் இம்மாதம் 9 ஆம் தேதி 10, 11 ஆம் தேதிகளில் கோயில் கொடை விழா நடைபெறுகிறது.
கொடை விழாவில் பல்வேறு பகுதியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். ஆகவே பக்தர்கள் வசதிக்காக திருநெல்வேலியில் இருந்து பாலாமடை கிராமத்திற்கு சிறப்பு பேரூந்துகள் இயக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...