இல்லாத நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து ரூ.10 லட்சம் மோசடி: 4 பேர் கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கட்டணஞ்செவல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கிடசாமியின் மகன் ஜெயக்கண்ணன்(45). இதே ஊரைச் சேர்ந்த ராமுதாய், மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த
Updated on
1 min read

விருதுநகர் அருகே இல்லாத நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து ரூ.10 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கட்டணஞ்செவல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கிடசாமியின் மகன் ஜெயக்கண்ணன்(45). இதே ஊரைச் சேர்ந்த ராமுதாய், மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த அழகுலட்சுமி. இவர்கள் இருவருக்கும் சிவகாசி-மதுரை சாலையில் 26 ஏக்கர் சொந்தமாக இருப்பதாக கூறி(இல்லாத நிலத்திற்கு) அதே பகுதியைச் சேர்நத பி.நடராஜன், மகேந்திரன் ஆகியோர் தங்களுக்கு கிரையம் செய்து கொடுத்தது போல் போலி ஆவணம் தயாரித்துள்ளனர். கடந்த 12.8.2013 அன்று நடராஜன் என்பவர் இந்த ஆவணத்தை ஜெயக்கண்ணனிடம் காண்பித்து கிரையம் செய்து கொடுத்துள்ளார்.

இதற்காக கிரையமாக ரொக்கம் ரூ.91 ஆயிரமும், பத்திர பதிவுக்காக ரூ.90 ஆயிரமும் என மொத்தம் ரூ.10 லட்சமும் நடராஜன் பெற்றுள்ளார். பின்னர் குறிப்பிட்ட நாளுக்கு பின் ஜெயக்கண்ணன் வாங்கிய நிலத்திற்கு பட்டா பதிவு செய்வதற்காக நேரில் பார்க்கச் சென்றாராம். அப்போது, குறிப்பிட்ட பகுதிக்கு சென்று  அந்த நிலம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, குறிப்பிட்ட நபர்களுக்கு இப்பகுதியில் நிலம் இல்லையென்பதும், ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளது தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் புகார் செய்தார். அந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குறிப்பிட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் பி.நடராஜன், ராமூதாய், மகேந்திரன், அழகுலட்சுமி ஆகியோர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com