விருதுநகர் அருகே பட்டாசு ஆலை உரிமையாளரிடம் ரூ.9.45 லட்சம் மோசடி செய்த முகவர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை உரிமையாளரிடம்  பட்டாசுகள் வாங்கி விநியோகித்த வகையில் ரூ.9.45 லட்சத்தை மோசடி செய்த முகவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை
Updated on
1 min read

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை உரிமையாளரிடம்  பட்டாசுகள் வாங்கி விநியோகித்த வகையில் ரூ.9.45 லட்சத்தை மோசடி செய்த முகவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வெ.ராமமூர்த்தி(50). இவர் இப்பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையின் பங்குதாரராக இருந்து வருகிறார். அந்த வகையில் கடந்த தீபாவளியின் போது மதுரையைச் சேர்ந்த முகவர் சரவணக்குமார் இவரை அணுகியுள்ளார். அப்போது, மதுரை ஆயுதப்படை அங்காடிக்கு பட்டாசு கிப்ட் பாக்ஸ்கள் தேவையிருப்பதாக தெரிவித்தாராம்.

அதன் அடிப்படையில் பங்குதாரரான ராமமூர்த்தியின் பொறுப்பில் இந்த ஆலையிலிருந்து ரூ.9 லட்சத்து 45 ஆயிரத்து 837 மதிப்பிலான பட்டாசுகளை அனுப்பினாராம். ஆனால், இதற்குரிய தொகையை கேட்ட போது தருவதாக கூறுவாராம். இந்நிலையில் தாமதம் ஆவதாக குறிப்பிட்டு கேட்டாலும் ஏதாவது காரணத்தை முகவர் சகரவணக்குமார் குறிப்பிட்டு வந்துள்ளார்.

இதையடுத்து, கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு மதுரை ஆயுதப்படை அங்காடி பொறுப்பாளரான டி.எஸ்.பியை சந்தித்து, பட்டாசு விநியோகம் செய்ததற்கான பணம் குறித்து கேட்டுள்ளார். அப்போது, அதற்கான பணத்தை முகவர் சரவணக்குமாரியிடம் ஏற்கனவவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.  அப்போது, தனக்கு வரவேண்டிய குறிப்பிட்ட பணத்தை முகவர் மோசடி செய்துள்ளது தெரியவந்தததும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் இது தொடர்பாக பட்டாசு ஆலை பங்குதாரார் ராமமூர்த்தி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனிடம் புகார் மனு அளித்தார். அதையடுத்து அந்த மனு மீது உடனே நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் பணத்தை மோசடி செய்த முகவர் சரவணக்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com