நாமக்கல் அலங்காநத்தம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் பள்ளி மாணவன் உள்பட இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர்.
நாமக்கல் அருகே பொட்டிரெப்பட்டியைச் சேர்ந்த துரைசாமியின் மகன் சுரேஷ்குமார்(20) கூலித்தொழிலாளி. இவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த தத்துவம் மகன் பிரதீப்குமார்(17), குணசேகரன் மகன் சௌந்திரராஜன்(21). இதில், பீரதிப்குமார் அங்குள்ள அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவர். சௌந்திரராஜன் டிராக்டர் ஓட்டுநர்.
இந்நிலையில், இம்மூன்று பேரும் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் பொட்டிரெட்டிப்பட்டியிலிருந்ந்து அலங்காநத்தம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர். சுரேஷ்குமார் வண்டியை ஓட்ட மற்ற இருவரும் பின்னால் அமர்ந்திருந்தனர். அலங்காநத்தம் மயானம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரியின் முகப்பு விளக்கு வெளிச்சத்தால் சுரேஷ்குமார் நிலை தடுமாறியதில் மோட்டார் சைக்கிளை சாலையின் இடதுபுறத்தில் இருந்த மரத்தில் பலமாக மோதியதாக தெரிகிறது.
இதில் தூக்கி வீசப்பட்ட சுரேஷ்குமார், பிரதீப்குமார் ஆகியோருக்கு தலை, உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சௌந்திரராஜன் பலமான காயங்களுடன் உயிர்தப்பினார். அப்பகுதியில் சௌந்திரராஜனை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த எருமப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த சுரேஷ்குமார், பிரதீப்குமார் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர்.
போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளை அதிவேகத்தில் இயக்கியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.