குஜராத்தைப் போல் நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: குமரி அனந்தன்

குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப் பட்டுள்ளது போல், இந்தியா முழுமைக்கும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸின் மூத்த தலைவர் குமரி அனந்தன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறினார்.
குஜராத்தைப் போல் நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: குமரி அனந்தன்
Updated on
1 min read

குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப் பட்டுள்ளது போல், இந்தியா முழுமைக்கும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸின் மூத்த தலைவர் குமரி அனந்தன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறினார்.

தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர் குமரி அனந்தன் இன்று ஈரோட்டுக்கு வந்திருந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,

பூரண மதுவிலக்கு என்பது காந்தியக் கொள்கை ஆகும். காந்தி பிறந்த மண்ணான குஜராத்தில் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, பூரண மதுவிலக்கை அந்த மாநிலத்தில் அமல் படுத்தியுள்ளார். அவர் இன்று இந்தியாவின் பிரதமர் ஆன பிறகு, முதல் முதலாக நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால், காந்தியக் கொள்கையான பூரண மதுவிலக்கு குறித்து அவர் எதையும் குறிப்பிடவில்லை.

அதுபோல், நதிகளை இணைப்பது குறித்தும் அவர் எதுவும் பேசவில்லை.

முன்னர் 1987ல் நான் நதிகளை இணைக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தேன். அப்போது, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி, நதிகளை இணைப்பதற்கு சாத்தியம் உள்ளது. எனவே நான் நதிகளை இணைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

எனவே, பிரதமர் மோடி, நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com