விருதுநகர் அருகே ரூ.1.50 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் அருகே பாண்டியன் நகர் காந்திஜி தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் அழகர்(35). இதே பகுதியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன்(37). இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே பழக்கம் உள்ளது. இதைக்
Published on

விருதுநகர் அருகே ரூ.1.50 லட்சத்தை மோசடி செய்த இரண்டு பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே பாண்டியன் நகர் காந்திஜி தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் அழகர்(35). இதே பகுதியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன்(37). இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே பழக்கம் உள்ளது. இதைக் காரணமாக வைத்து முனீஸ்வரனும், அடையாளம் தெரிந்த நபர் ஒருவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அழகரை அணுகி ரூ.1.50 லட்சம் தேவையாய் இருப்பதாக கூறியுள்ளனர். இதை உண்மையென நம்பிய நிலையில் அழகர், முனீஸ்வரனிடம் பணம் கொடுத்துள்ளார். அப்போது, இப்பணத்தை குறிப்பிட்ட நாள்களுக்குள் திருப்பி தர வேண்டும் என்றும், இல்லையென்றால் தன்னுடைய வாகனத்தை ஈடாக தருவதாகவும் கூறி முனீஸ்வரன் எழுதிக் கொடுத்தாராம்.

இதையடுத்து, குறிப்பிட்ட நாள்கள் கடந்த பின்னும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லையாம். இது தொடர்பாக அழகர் வீட்டிற்கு நேரில் சென்று கேட்டாராம். அதற்கு முனீஸ்வரன் பணமெல்லாம் தரமுடியாது என மறுத்துததோடு, மேலும் சொந்தரவு செய்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம்.  இது தொடர்பாக உடனே பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் அழகர் திங்கள்கிழமை புகார் செய்தார். அதன் அடிப்படையில் ரூ.1.50 லட்சம் மோசடி செய்ததாக முனீஸ்வரன் உள்ளிட்ட இருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com