

இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் வாஞ்சிநாதனின் 103வது நினைவு தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் உள்ள அவருடைய உருவசிலைக்கு சர்வகட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள வாஞ்சிநாதனின் மார்பளவு உருவசிலைக்கு தென்காசி கோட்டாட்சியர் ரமேஷ் தலைமையில் வட்டாட்சியர் கோமதிசங்கரநாரயணன்,வருவாய்ஆய்வாளர் வின்சென்ட் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செங்கோட்டையில் உள்ள அவருடைய உருவசிலைக்கு நகர்மன்ற தலைவர் மோகனகிருஷ்ணன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நகர அதிமுக செயலர் தங்கவேலு,நகர்மன்ற துணை தலைவர் கணேசன்,அண்ணாதொழிற்சங்கநிர்வாகி சிவனுபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நகர திமுக சார்பில் நகர செயலர் எஸ்.எம்.ரஹீம்,மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வழக்குரைஞர் ஆ.வெங்கடேசன்,குத்தாலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வாஞ்சிநாதனின் தம்பி கோபாலகிருஷ்ணனின் மகன் ஹரிகரசுப்பிரமணியன், கோபாலகிருஷ்ணனின் பேரன் வாஞ்சிகோபாலகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு பிராமணர்சங்கம் சார்பில் மாநிலபொதுசெயலர் வி.ஜெகநாதன்,அமைப்பு செயலர் நரசிம்மன்,கொள்கைபரப்பு செயலர் சங்கரன்,மாநிலஇளைஞரணி செயலர் ஸ்ரீராம், மாவட்ட தலைவர் சிவகுமார்,பொருளாளர் ஐயப்பன், ஆலோசகர் ராமநாதன்,மாநில இணைசெயலர்கள் ஸ்ரீபதி,ஸ்ரீகுமார்,விஸ்வநாதன், சீனிவாசன்,சுப்பிரமணியன் பரமேஸ்வரன், ஆகியோர் கலந்துகொண்டனர்.மாநில பொதுசெயலர் வி.ஜெகநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
வாஞ்சிநாதனுக்கு தபால் தலைவெளியிடவேண்டும்,சட்டசபையில்அவருடைய படத்தை திறந்து வைகக்வேண்டும்,வாஞ்சிமணியாச்சி ரயில்வே நிலையத்தில் வழங்கப்படும் ரயில்வே டிக்கெட்டில் வாஞ்சிமணியாச்சி என்று இடம்பெறவேண்டும், வாஞ்சி மணியாச்சியில் நினைவு சின்னம் அமைக்கவேண்டும் என்றார் அவர். நகர பாஜக சார்பில் நகர தலைவர் மாரியப்பன்,நகர்மன்ற உறுப்பினர்கள் முத்துகுமார், மணிகண்டன்,நகர பொதுசெயலர்மாடசாமி,சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டார செயலர்கள் சக்கரபாண்டி,வலங்கையா, மாரியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு மனித உரிமைகள் கழகம் சார்பில் மாவட்ட செயலர் முருகையா,மாநிலபொருளாளர் டாக்டர்.மக்தூம்,மகளிரணி மாவட்ட தலைவி சத்யபாமா,மாவட்ட வழக்குரைஞர்பிரிவு செயலர் வீரபுத்ரன்,ஆகியோர் கலந்துகொண்டனர்.
செங்கோட்டைமகாத்மா காந்தி சேவா மைய நிறுவன தலைவர் விவேகானந்தன்,கைலாசநாதன், நகர காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் ராஜூ,முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ஆதிமூலம்,ராமர்,ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.