ஆறு யானைகளை கொன்ற குட்டி வீரப்பன் கைது

தமிழ்நாடு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் யானைகளை கொன்று தந்தங்கள் கடத்தல் மற்றும் மான் உள்ளிட்ட விலங்குகளை கொல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு பல ஆண்டுகளுக்கு சிம்மசொம்மனாம
Updated on
1 min read

தமிழ்நாடு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் யானைகளை கொன்று தந்தங்கள் கடத்தல் மற்றும் மான் உள்ளிட்ட விலங்குகளை கொல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு பல ஆண்டுகளுக்கு சிம்மசொம்மனாம திரிந்த வீரப்பனை அதிரப்படையின சில ஆண்டுகளுக்கு முன் கொன்றனர். இதனை தொடர்ந்து நிம்மதியாக இருந்த நிலையில் கௌளத்தூர் பகுதியைச் சேர்ந்த இருசார் மகன் சரவணன் என்பவர் வீரப்பன் போன்று செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவர் தனது கூட்டளிகள் 20 பேருடன் 6 ஆண் யானைகளை கொன்றதாக கர்நாடக வனத்துறையினருக்கு புகார் வந்தன. இந்நிலையில் கடந்த வாரம் மாதேஸ்வர வன உயிரியல காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் யானையை வேட்டையாடுவதாக வந்த தகவலை அடுத்து, அவர்களை பிடிக்க சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தி, தமிழக வனப்பகுதிக்கு தப்பி வந்ததாக தெரிகிறது.இதனை தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.

மேலும் தமிழக பகுதியில் இபிடிக்க தமிழக போலீஸாரின் உதவியும் கோரப்பட்டது.இ ந் நிலையில் சரவணன் அவரது வீட்டில் தங்கிருந்த தகவலை அடுத்து, அங்கு சென்ற போலீஸார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது  இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி பாக்யராஜ் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட சரவணை விசாரணைக்காக தங்களிடம் ஒப்படைக்கவேண்டி கர்நாடக வனதுறையினர் மேட்டூரில் முகாமிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com