சிவகாசி அருகே பட்டாசு ஆலை தீ விபத்தில் 2 பேர் படுகாயம்

சிவகாசி அருகே உள்ளது ஆண்டியாபுரம். இங்கு செல்வகணேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்கம் போல் திங்கள்கிழமை மாலையில் பணி முடிந்து தொழிலாளர்கள்
Updated on
1 min read

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் கழிவுகளை தீயிட்டு கொளுத்தும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் திங்கள்கிழமை மாலையில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிவகாசி அருகே உள்ளது ஆண்டியாபுரம். இங்கு செல்வகணேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்கம் போல் திங்கள்கிழமை மாலையில் பணி முடிந்து தொழிலாளர்கள் வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, இதே பகுதியில் உள்ள மீனாம்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம்(55), சுப்புராஜ் என்பவரின் மகன் ராஜ்23). இவர்கள் இருவரும் ஒவ்வொரு அறையாக சென்று பட்டாசு கழிவுகளை சேகரித்து எரிக்கும் பணியில் ஈடுபட்டியிருந்தனர்.

அப்போது, திடீரென கழிவு பட்டாசுகள் வெடித்து சிதறியதில் இருவருமே படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அங்கு பணி முடிந்து சென்ற தொழிலாளர்கள் உடனே மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரையும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸார் ஆலை உரிமையாளர் செல்வகணேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com