கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

நாளை அண்ணாமலைப் பல்கலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர கலந்தாய்வு: சிறப்பு ஏற்பாடுகள்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் நாளை புதன்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி

News image
Updated On :24 ஜூன் 2014, 12:44 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் நாளை புதன்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெறுகிறது. அவர்களுக்கு சக்கர நாற்காலி, செவிலியர் உதவியாளர் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பின்னர் 9 மணிக்கு மற்ற பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம் (MBBS), பல்மருத்துவம் (BDS) ஆகிய படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு பல்கலைக்கழக நி்ர்வாக அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. 150 எம்பிபிஎஸ் இடங்கள், 100 பிடிஎஸ் இடங்களுக்கு மொத்தம் 7421 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் தரவரிசை (Rank List) அடிப்படையில் கலந்தாய்விற்கு மொத்தம் 1692 மாணவ, மாணவியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதில் பொதுப்பிரிவினர் (OC)- 115, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) -1063, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) (BCM)- 69, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC)- 269, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC)- 133, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SCA) (அருந்ததியினர்)- 21, பழங்குடியினர் (ST)- 13, மாற்றுத் திறனாளிகள் (Differentaly Abled Candidates)- 9 பேர் ஆவர். எந்த ஒரு இடஒதுக்கீடு பிரிவைச் சார்ந்த இடம் காலியாக இருந்தாலும், அந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களை கொண்டே இரண்டாம் கட்ட கலந்தாய்வில் இடங்கள் நிரப்பப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இலவச பேருந்து வசதி: சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்தாய்வு நடைபெறும் பல்கலைக்கழக சாஸ்திரி ஹால் வரை சென்று வர இலவச பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் கலந்தாய்வு நடைபெறும் இடத்தை அறிந்து கொள்ளும் வகையில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் சாஸ்திரி ஹாலில் வெளிப்புறம் தற்காலிக உணவு விடுதி, தேநீர் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுடன் வரும் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அமருவதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை, வங்கிகடன் உள்ளிட்டவை குறித்து பதிவு செய்ய, பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் வங்கிகளின் அலுவலர்கள் கொண்ட முகாம்கள் தனி, தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்விற்கான விரிவான ஏற்பாடுகளை தமிழகஅரசு முதன்மைச் செயலரும், பல்கலைக்கழக நிர்வாகியுமான ஷிவ்தாஸ்மீனா, பதிவாளர் ந.பஞ்சநதம், பல்கலைக்கழக வருவாய் அலுவலர்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டி.கிருஸ்துராஜ் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.