மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மனைப்பட்டா கேட்டு திருநங்கைகள் மனு

திருநங்கைகள் வேல்விழி, மோகனா ஆகியோர் தலைமையில் கடலூர் மார்க்கெட் காலனி, முதுநகர், சுத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள்  கடலூர் கோட்டாட்சியர் மோ.

Updated On :26 ஜூன் 2014, 11:10 am

மனைப்பட்டா கோரி கோட்டாட்சியரிடம் திருநங்கைகள் மனு அளித்தனர்.

திருநங்கைகள் வேல்விழி, மோகனா ஆகியோர் தலைமையில் கடலூர் மார்க்கெட் காலனி, முதுநகர், சுத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள்  கடலூர் கோட்டாட்சியர் மோ.ஷர்மிளாவிடம் மனைப்பட்டா கேட்டு கோரிக்கை மனு புதன்கிழமை அளித்தனர்.

இதுகுறித்து திருநங்கைகள் கூறியது, எங்களுக்கு குடியிருப்பதற்கு சொந்தமாக இடம் இல்லை. எனவே கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியின்போது மனை பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தோம். அப்போது கடலூர் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்க அறிவுரை வழங்கினார். அதன் பேரில் மனு கொடுத்து இருக்கிறோம்.

ஏற்கனவே கடந்த 2005-ம் ஆண்டு திருமாணிக்குழி கிராமத்தில் 43 திருநங்கைகளுக்கு மனை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல எங்களுக்கும் மனை வழங்க வேண்டும். அது மட்டுமல்ல ஏற்கனவே மனை வழங்கப்பட்டுள்ள, தற்போது மனை கேட்டு மனு கொடுத்துள்ள திருநங்கைகளுக்கும் அரசு இலவச வீடு கட்டித்தர வேண்டும் என்றனர்.

பின்னர் இதுகுறித்து கோட்டாட்சியர் ஷர்மிளா கூறியது, மனைபட்டா கேட்டு 17 திருநங்கைகள் மனு கொடுத்துள்ளார்கள். ஏற்கனவே திருமாணிக்குழியில் 43 பேருக்கு மனை கொடுத்த இடத்தின் அருகில் உள்ள காலி மனையில் 17 பேருக்கும் மனை கொடுப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.