விருதுநகர் அருகே  வெடி விபத்தில் மேலும் 2 பேர் சாவு: கூடாரம் நடத்திய ஒருவர் கைது

விருதுநகர் அருகே கருந்திரி தயார் செய்த கூடாரத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதையடுத்து சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக கூடாரம் நடத்தி வந்த ஆசிர்வாதம் என்பவரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான உள்ள இரண்டு பேரை ஆமத்தூர் போலீஸார் தேடி வருகின்றனர்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே கருந்திரி தயார் செய்த கூடாரத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதையடுத்து சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக கூடாரம் நடத்தி வந்த ஆசிர்வாதம் என்பவரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான உள்ள இரண்டு பேரை ஆமத்தூர் போலீஸார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் அருகே ஒண்டிப்புலிநாயக்கனூர் கம்மாபட்டியில் ஐயப்பன், அதிமுக கவுசிலர் மீனாட்சிி சுந்தரம் மற்றும் ஆசீர்வாதம் ஆகிய மூன்று பேர்  அனுமதியில்லாமல் அருகருகே கூடாரம் அமைத்து பட்டாசுகளுக்கு பயன்படுத்தும் கருந்திரிகளை தயாரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் கருந்திரிகளை இரும்பு கத்தியால் துண்டாக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாரத விதமாக உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சங்கரலிங்காபுரத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் துரைராஜ்(45), சங்கரவேல்(42) ஆகிய இருவரும் உடல் கருகி படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில், சிகிச்சை பலனின்றி இருவரும் ஞாயிற்றுக்கிழமை காலையில் உயிரிழந்தனர். ஏற்கனவே 4 பேர் உயிரிழந்த நிலையில் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து அனுமதியில்லாமல் கருந்திரி கூடாரத்தை நடத்தியதாக 3 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசீர்வாதத்தை மட்டும் போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அதிகுமுக கவுன்சிலர் மீனாட்சிசுந்தரம், ஐயப்பன் ஆகியோரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com