இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஜூலை 4-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்: நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் முடிவு

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜூலை 4-ம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது என

News image
Updated On :29 ஜூன் 2014, 12:32 pm

ஜி.சுந்தரராஜன்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜூலை 4-ம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானித்துள்ளனர்.

சிதம்பரம் ஷாஜகான் காம்ப்பிளக்ஸில் கடலூர் மாவட்ட நியாயவிலை கடை பணியாளர் சங்க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் துரை.சேகர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.ஆர்.தங்கராசு வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் நடராஜன், அறிவழகன், நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாநில பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா சிறப்புரையாற்றினார். முன்னாள் மாநில பிரசார செயலாளர் கருப்பையா, கூட்டுறவு வீடு கட்டும் சங்க பணியாளர் யூனியன் மாநிலச் செயலாளர் ஆர்.ராகவேந்திரன் ஆகியோர் பங்கேற்று பேசினர். கனகசபை நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நியாயவிலைக்க டையிலேயே பொருள்களை எடையிட்டு வழங்காமல், இருப்பு குறைவிற்கு அபராதம் விதிக்கும் போக்கை கைவிட வேண்டும், நியாயவிலைக்கடை பணிகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட வேண்டும், ஏடிஎம் மூலம் மாத ஊதியம் வழங்கிட வேண்டும், சமவேலைக்கு சமஊதியம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்பரேஷன் வழங்கப்படும் ஊதியத்தை கூட்டுறவுத்துறை பணியாளர்களுக்கும் வழங்கிட வேண்டும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை பொட்டலமாக வழங்கிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.