இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிதம்பரத்தில் அனுமதியின்றி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெடிகள் பறிமுதல்

சிதம்பரம் மேலரதவீதியில் வெங்கடேஸ்வரா பாத்திரக்கடை வைத்து நடத்துபவர் கற்பகநாதன் (45). இவர் தீபாவளி பண்டிகையின் போது லைசென்ஸ் பெற்று வெடிக்கடை வைத்து நடத்துபவர். இவர் வீட்டின் பின்புறம்

News image
Updated On :30 ஜூன் 2014, 1:36 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் அனுமதியின்றி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெடிகளை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

சிதம்பரம் மேலரதவீதியில் வெங்கடேஸ்வரா பாத்திரக்கடை வைத்து நடத்துபவர் கற்பகநாதன் (45). இவர் தீபாவளி பண்டிகையின் போது லைசென்ஸ் பெற்று வெடிக்கடை வைத்து நடத்துபவர். இவர் வீட்டின் பின்புறம் குடோனில் அனுமதியின்றி மீதமுள்ள வெடிப்பெட்டிகளை வைத்திருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ரவுடி கண்காணிப்பு மற்றும் குற்றத்தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டுராபின்சன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பக்தவத்சலம் மற்றும் நகர போலீஸார் திங்கள்கிழமை சென்று திடீர் சோதனை நடத்தி, அரசு அனுமதியின்றியும், உரிமம் இன்றியும் சிவகாசியில் தயாரிக்கப்பட்ட 44 வெடிப்பெட்டிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சமாகும். மேலும் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் கொடுத்த புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து கடை உரிமையாளர் கற்பகநாதனை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.