சிதம்பரத்தில் அன்னதானம்: கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தேர் மற்றும் தரிசன திருவிழா ஜூலை 3, 4 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி எம்.பி.ராஜா


சிதம்பரத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தில் தரமான உணவு வழங்க்கப்படுகிறதா என கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தேர் மற்றும் தரிசன திருவிழா ஜூலை 3, 4 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி எம்.பி.ராஜா தலைமையில் ஆய்வாளர்கள் பத்மநாபன், குணசேகரன் ஆகியோர் கோயில் கிழக்கு கோபுர வாயில் முன்பு உள்ள சன்னதி தெருவில் உள்ள பங்க் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த குட்கா, பான்மசாலா பொருள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கீழசன்னத்தில் திருச்சிற்றம்பலம் அன்னதான அறக்கட்டளை என்ற பெயரில் நவதாண்டவ தீட்சிதர், பொதுமக்களுக்கு அன்னதானம் செய்து வருகிறார். அன்னதானம் நடைபெறும் இடத்திற்கு உணவு பாதுகாப்பு அதிகாரி எம்.பி.ராஜா சென்று திடீர் ஆய்வு செய்து, தரமான, சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். உணவு சாப்பிட்டு பார்த்து உணவு தரமாக இருந்ததாக தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...