இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிதம்பரத்தில் ரூ.25 லட்சம் செலவில் அம்மா உணவகம் கட்ட பூமிபூஜை

சிதம்பரம் பஸ்நிலையம் அருகே உள்ள காமராஜ் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.25 லட்சம் செலவில் அம்மா உணவகம் அமைக்க புதிய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஜூன் 2014, 1:16 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் ரூ.25 லட்சம் செலவில் அம்மா உணவகத்திற்கு கட்டடம் கட்ட பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் பஸ்நிலையம் அருகே உள்ள காமராஜ் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.25 லட்சம் செலவில் அம்மா உணவகம் அமைக்க புதிய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. புதிய கட்டடம் கட்டுவதற்காக சிறப்பு ஹோமம் மற்றும் பூமிபூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் தலைமை வகித்தார். நகரமன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் முதல் கல்லை எடுத்து கொடுத்து பூமிபூஜையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அமுதா சிவானந்தம், அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், சிதம்பரம் கூட்டுறவு நகர வங்கித் தலைவர் சொ.ஜவகர், ஆவின் பால் சங்கத் தலைவர் சி.கே.சுரேஷ்பாபு, நகர அதிமுக அவைத் தலைவர் எம்.யேசுராஜ், நகரமன்ற உறுப்பினர்கள் ஆ.ரமேஷ், ஜி.செல்வராஜ், நடனசபாபதி தீட்சிதர், கே.சீத்தாராமன், பெரு.திருவரசு, மார்கெட் நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.