கடையம் அருகே ராஜீவ் சிலை உடைப்பு: காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

கடையத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச். 02) அன்று ராஜீவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலையை எதிர்க்கும் மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியலில் நாம் தமிழர்
Updated on
1 min read

கடையம் அருகே பாப்பான்குளம் கிராமத்தில் ராஜீவ் சிலை உடைக்கப்பட்டது. அதைக் கண்டித்து காங்கிரசார் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடையத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச். 02) அன்று ராஜீவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலையை எதிர்க்கும் மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியலில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டனர். இந்நிலையில் கடையம் அருகே பாப்பான்குளம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே அமைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி சிலையை ஞாயிறு இரவு மர்ம நபர்கள் தாக்கி சிலையில் தலையை தூண்டாக்கி விட்டனர். திங்கள் காலை இதனைக் கண்ட காங்கிரசார் உடனடியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜீவ் சிலையை உடைத்ததில் நாம் தமிழர் அமைப்பினர் தான் ஈடுபட்டிருப்பார்கள்  எனவே உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையேற்றார். தேசிய கப்பல் ஆலோசனைக் குழு உறுப்பினர் அமீர்கான், வட்டாரக் காங்கிரஸ் தலைவர் அழகுதுரை, உணவுப் பாதுகாப்புக்கழக உறுப்பினர் வைகுண்ட ராஜ், விவசாயப் பிரிவுத் தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் வட்டாரக் காங்கிரஸ் தலைவர் ராமச்சந்திரன், அம்பை நகர காங்கிரஸ் தலைவர் ஜீவா, சங்கர நாராயணன், களக்காடு வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர் பட்டுத்தேவர், ரமேசு மாயவன், சப்பாணி, கிருஷ்ணமூர்த்தி, அந்த்ரேயா, பாப்பான்குளம் கிராமக் காங்கிரஸ் தலைவர் சண்முகம், சிவகுரு, முருகதாஸ், கோவிலான்குளம் குமாரசாமி, பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர். போலிஸார் இதற்கு அனுமதிபெறவில்லை எனவே அனுமதிக்க முடியாது என்றவுடன் அனைவரும் கலைந்து சென்றனர்.

அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிமாறன், தலைமையில் கடையம் காவல் ஆய்வாளர் முருகன், பொன்ராஜ், உதவி ஆய்வாளர் சிவாகரன் மற்றும் போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com