முதியவரிடம் உறவினர் எனக்கூறி நூதன முறையில் 2 மோதிரம் திருட்டு

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள வையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(60). இவரது மனைவியை விருதுநகர் எம்.ஜி.ஆர் சாலைப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு
Updated on
1 min read

விருதுநகரில் உறவினர் எனக்கூறி முதியவரிடம் நூதன முறையில் மோதிரத்தை அபகரித்துச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள வையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(60). இவரது மனைவியை விருதுநகர் எம்.ஜி.ஆர் சாலைப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செவ்வாய்கிழமை சிகிச்சைக்கு அழைத்து சென்று திரும்பியுள்ளார். அப்போது, ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக மனைவியுடன் நின்றிருந்தாராம். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் நானும் உங்க கிராமத்தைச் சேர்ந்தவன் என்றும், உறவினர் தான் என நைசாக பேசியுள்ளார். அதையடுத்து பஸ் நிறுத்தப்பகுதியில் எதிரே உள்ள அரசு மதுபானக் கடைக்கு குடிப்பதற்கு அழைத்து செல்வதற்கு முன்பு குடிக்கச் செல்லும் போது கைகளில் மோதிரம் அணிந்திருக்க கூடாது எனக்கூறியுள்ளார்.

இதை உண்மையென நம்பிய முதியவர் தன் கைகளில் இருந்த இரண்டு  மோதிரத்தை கழற்றி மர்ம நபரிடம் கொடுக்க அதை வாங்கி பையில் பத்திரமாக  வைத்துள்ளார். இதையடுத்து இருவரும் நன்றாக குடித்துள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் குடிபோதையில் வெளியே சென்று வருவதாக கூறி மர்ம நபர் தப்பினாராம். அங்கு அமர்ந்திருந்த நிலையில் திரும்ப வராததும், குடிபோதையில் தான்  ஏமாற்றப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இது தொடர்பாக உடனே விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் ராமகிருஷ்ணன் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து மோதிரத்தை உறவினர் எனக் கூறி நூதனமாக திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com